29 வயது ஆணின் உடலில் பெண் உறுப்பு! அதிர்ச்சியில் ஆழ்ந்த டாக்டர்கள்! பிறகு நடந்த அதிசயம்!

ஆண் ஒருவரின் உடலில் பெண்பாலின உறுப்பு இருந்துள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மும்பையில் 29 வயது ஆண் ஒருவருற்கு வினோதமான நோயொன்று இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவருடைய உடலில் பெண்பாலின இனப்பெருக்கும் உறுப்பும், பெண்பாலின கருப்பையும் இருந்துள்ளது. அந்த கருப்பையானது மலட்டுத் தன்மையுடன் இருந்துள்ளது.

அவரிடம் தெரியப்பட்ட மாற்றங்களைக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய உடலில் அலோபியன் குழாய்கள், கருப்பை வாய், மற்றும் பெண் பாலின உறுப்புகள் ஆகியவற்றை கண்டறிந்துள்ளனர். மேலும் அவருக்கு "அஸூஸ்பர்மியா" ("Azoospermia") என்ற நோய் இருந்துள்ளது. அறுவை சிகிச்சையின் மூலம் அவருடைய உடம்பில் இருந்த பெண்பாலின உறுப்புகளை அகற்றி உள்ளனர்‌. அவருக்கு அஸூஸ்பர்மியா நோய் இருந்ததால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள இயலவில்லை என்றும் கூறினர்.

சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் கூறுகையில், இந்த நோயின் பெயர் "Persistent Mullerian Duct Syndrome" ("பெர்ஸிஸ்ட்டென்ட் முளெரியன் டக்ட் ஸின்ரோம்") என்பதாகும். இந்த நோயானது கிட்டத்தட்ட 200 ஆண்களிடம் உள்ளது. இதனை அகற்றுவதே மருத்துவ உலகில் மிகவும் அரிதான விஷயம் என்றும் கூறியுள்ளனர்.

ஆணொருவரின் உடலில் பெண் பாலின உறுப்புகளிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.