ஆசை 60 நாள்..! மோகம் 30 நாள்..! காதல் திருமணமான 29 நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் மனைவி! அதிர்ச்சி காரணம்!

கோவையில் திருமணம் ஆன 29வது நாள் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை கணபதி அருகே பாரதியார் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திகேயனும் தனியார் நிறுவன ஊழியர் சத்யவாணியும் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். 

காதலிக்கும்போது அன்னியோன்யமாக இருந்து வந்த இவர்கள் திருமணம் ஆன ஒரு சில நாட்களிலேயே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே வழக்கம்போல் சண்டை மூண்டுள்ளது.

இதனால் வேதனை அடைந்த சத்யவாணி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் அளிக்க சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சத்யவாணியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல வருடங்களாக காதலித்த இவர்கள் திருமணம் ஆன ஒரே மாதத்தில் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்சனை என ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மோகம் 30 நாள் ஆசை 60 நாள் என்பார்கள். குறைந்தபட்சம் மோகத்திற்கான நாள் முடிவதற்குள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பிரச்சனை நடந்துள்ளதாகவே தெரிகிறது.