குறைந்த செலவில் மார்பகத்தை பெரிதாக்க விரும்பிய பெண்..! ஆனால் ஆப்பரேசனுக்கு பிறகு 2 மார்பகங்களையும் இழந்த விபரீதம்! அதிர்ச்சி காரணம்!

இஸ்தான்புல்: மார்பகத்தை பெரியதாக்க ஆசைப்பட்ட பெண், இறுதியில் மார்பகமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


இங்கிலாந்தின் தெற்கே உள்ள வில்ட்ஷைர் பகுதியை சேர்ந்தவர் ஸாரா ரோட்ரிக்ஸ். 28 வயதான இவர், தனது மார்பகத்தை பெரிதுபடுத்த விரும்பினார். இதற்காக, துருக்கிக்கு பறந்து சென்று, இஸ்தான்புல் நகரில்  சில லட்சங்களை செலவிட்டு, செயற்கை மார்பகம் பொருத்திக் கொண்டார். 7 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்,பெரும் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பிய ஸாராவுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  

ஆம், ஒருநாள் இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மார்பகத்தில் இருந்து ஒருவித திரவம் கசிந்துள்ளது. அதனை பார்த்த ஸாரா அதிர்ச்சி அடைந்தார். ஆம், அது சீழ் பிடித்ததாகும். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை மையத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால், அவர்கள் ஸாராவின் அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை என்பதோடு,  அவரது அலைபேசி அழைப்பையும் எடுக்காமல் நிராகரித்துள்ளனர். தான் முற்றிலும் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ஸாரா, இதன்பேரில் உள்ளூரிலேயே அறுவை சிகிச்சை செய்து, செயற்கை மார்பகத்தை அகற்ற தீர்மானித்தார்.  

மார்பகங்களில் பொருத்தப்பட்ட சிலிக்கான் தரமற்றதாக இருந்ததோடு, பிளாஸ்டிக் சர்ஜரியும் சரியான முறையில் செய்யப்படாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, செயற்கை மார்பகங்ளை வெளியே எடுத்த டாக்டர்கள், இதனால் ஸாராவின் மார்பகங்களில் ஏற்பட்டிருந்த நோய்த்தொற்று பாதிப்பையும் சரிசெய்ய தீர்மானித்தனர். எனவே, அவரது உண்மையான மார்பகங்களையும் அறுத்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  

இதனால், தற்போது மார்பகம் எதுவுமின்றி, தட்டையான நெஞ்சுப்பகுதியுடன் ஸாரா வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பெரிய மார்பகத்திற்கு ஆசைப்பட்டு, தரமற்ற அறுவை சிகிச்சையை செய்து, இருந்த மார்பகங்களையும் பறிகொடுத்து, பரிதாபமாக வாழும் ஸாரா, தனது வாழ்வு மற்றவர்களுக்கு ஒரு பாடம் என வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.