2 வயது சிறுமிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த 28 வயது நபருக்கு நேர்ந்த பரிதாபம்! பரபரப்பு சம்பவம்!

2 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த இந்தியர் கைது செய்யப்பட்டிருப்பது ஆஸ்திரேலியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய நாட்டை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலையில் "சீ லைஃப்" ( "SEA LIFE") என்ற அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் 2 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை அணுக முயன்றுள்ளார். அந்த சிறுமி தன்னுடைய பெற்றோருடன் அங்கு வந்திருந்தார். திடீரென்று இந்த இந்திய இளைஞர் அந்த சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அருங்காட்சியகத்தில் விசாரணை நடத்தினர். நிகழ்ந்தவற்றை கேட்டறிந்தவுடன் காவல்துறையினர் இந்திய இளைஞரை கைது செய்து அழைத்து சென்றனர்.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி எதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடுத்த நாளே நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்த பட்டதாகவும் அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவமானது ஆஸ்திரேலியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.