அரைகுறை ஆடையுடன் டிக்டாக் வீடியோ! ஆபாச தளங்களில் பதிவேற்றமான விபரீதம்! சேலத்தில் 28 பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

டிக்டாக் வீடியோ எடுத்த 28 பெண்களின் வீடியோவானது ஆபாச வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாக தமிழ்நாட்டில் டிக்டாக் வீடியோக்கள் வீரியமாக வருகிறது. பெண்கள் தங்களுடைய நடிப்பு திறமையையும், நடன திறமையையும் டிக்டாக் வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். டிக்டாக் செயலியில் லைக்குகளை அல்ல வேண்டும் என்பதற்காக பெண்கள் தங்களுடைய துப்பட்டாவை தியாகம் செய்து வீடியோக்கள் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர்.

இவ்வாறு கடந்த 2 வாரங்களாக சேலம் மாவட்டத்தில் டிக்டாக் வீடியோக்களை பதிவேற்றம் செய்த 28 பெண்களின் வீடியோக்கள் ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட அந்த பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாயினர். பின்னர் சைபர்கிரைம் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்ட பெண்கள் வீடியோவை மட்டும் ஆபாச வலைதளங்களில் இருந்து வெளி எடுக்குமாறு கூறியுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அத்தகைய பெண்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.

இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களின் புகைப்படங்கள் கிடைத்தாலே ஆபாசமாக சித்தரிக்கும் இந்த காலத்தில், டிக் டாக் போன்ற அற்ப சந்தோஷத்திற்காக பெண்கள் தங்களுடைய ஆடைகளை களைப்பது மிகவும் ஆபத்தில் கூறியது என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.