ஸ்டாக்ஹோம்: கோடிக்கணக்கில் செலவு செய்து பொருத்திய செயற்கை மார்பகம் கீழே விழுந்ததால் பெண் ஒருவர் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
திடீரென கழன்று விழுந்த 27 வயது இளம் பெண்ணின் மார்பகம்! அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்! பகீர் காரணம்!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் ஏஞ்சலிக்கா இஸாக்சென். 2 குழந்தைகளுக்கு தாயான இவருக்கு, 27 வயதுதான் ஆகிறது. இந்நிலையில், தனது மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து பெரிதுபடுத்தி, அழகாகக் காட்ட ஏஞ்சலிக்கா விரும்பினார். இதற்காக, இன்ஸ்டாகிராம் வழியாக விளம்பரம் சிலவற்றை பார்த்திருக்கிறார்.
அதில், துருக்கியை சேர்ந்த ஒரு மருத்துவமனைக்குச் சென்ற செயற்கை மார்பகம் பொருத்தியுள்ளார். அது மட்டுமல்ல, தனது பின்னழகை எடுப்பாக்கவும், இடையழகை சிக்கென மாற்றவும் அங்கே அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இதன்படி எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அதற்காக லட்சக்கணக்கில் பணமும் செலவழித்திருக்கிறார்.
பெரிய அழகுடன் பார்ப்பவர்களை கிறங்கடித்துவிடலாம் என்ற கனவில் தாய்நாடு திரும்பியவருக்கு, பெரும் சோகம் நிகழ்ந்தது. ஆம், திடீரென அவரது வலது புற மார்பகத்தில் பொருத்தப்பட்ட செயற்கை சிலிக்கான், திடீரென மார்பகத்தை விட்டு விலகி கீழே தொங்கியது. உடனடியாக, மருத்துவமனை சென்ற அவரை பரிசோதித்த மருத்தவர்களை மார்பகத்தை கிழித்து, அந்த சிலிக்கானை வெளியே எடுத்தனர். இதேபோல, இடது புற மார்பகத்தில் இருந்தும் சிலிக்கானை வெளியே எடுத்துவிட்டனர்.
தற்போது ரத்தம் கசிந்த நிலையில் மார்பகத்தை வைத்துக் கொண்டு, மருத்துவமனையில் ஏஞ்சலிக்கா ஓய்வில் உள்ளார். தன்னைப் போல யாரும் செயற்கை மார்பகம் பொருத்தி, ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.