27 வயது பெண்ணொருவர் 90 அடி உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த பிறகும், தானே எழுந்து நடந்து சென்ற வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
90 அடி உயர கட்டிடத்தில் இருந்து விழுந்த பெண்..! கீழே விழுந்தவர் தானே எழுந்த நடந்த அதிசயம். வைரல் வீடியோ

ரஷ்யா நாட்டில் ஐலுசின்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வசித்து வந்த 27 வயது பெண்ணொருவர் 90 அடி உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த சிலர் பேரதிர்ச்சி அடைந்தனர்.
கீழே விழுந்த சில நிமிடங்களில் உடல் அசைவின்றி அந்த பெண் கிடந்ததை கண்ட மக்கள் பதறி போயினர். ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த பெண் தானாக எழுந்து உட்காருகிறார். அடுத்து அந்த பெண் எழுந்து நடந்தது அனைவருக்கும் வியப்பை தந்தது.
உடனே அந்த பெண் அருகிலிருந்த பொதுமக்களிடம் ஆம்புலன்ஸை வரவழைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த பெண் ஆம்புலன்ஸில் ஏறி வடக்கு சைபீரியாவில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு உள்காயங்கள் நிறைய ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். ஆனாலும், எந்தவித எலும்பு முறிவும் ஏற்படாமல் இருந்தது மருத்துவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.