7ம் வகுப்பு மாணவனை கரெக்ட் செய்து எஸ்கேப் ஆன 26 வயது பள்ளி ஆசிரியை! அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்!

எட்டாம் வகுப்பு மாணவனை ஆசை வார்த்தை காட்டி இழுத்துச் சென்ற இளம் ஆசிரியை மீது மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.


குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் அரசு வேலையில் பணிபுரிந்து வரும் 14 வயது மாணவனின் பெற்றோர் அவரது ஆசிரியர் மீது போலீசார் புகார் அளித்துள்ளனர். மாணவனின் பெற்றோர், 26 வயது பள்ளி ஆசிரியை தனது மகனை ஆசை வார்த்தை காட்டி தன்னுடன் அழைத்துச் சென்றதாக அவர்கள் அளித்த புகாரில் குறிப்பிட்டிருக்கின்றனர்.  

இதுகுறித்து போலீசார் அவர்களது பள்ளியில் விசாரிக்கையில், பள்ளி நிர்வாகமும் மாணவன் மற்றும் ஆசிரியர் இடையே இருந்து வந்த உறவினை கண்டித்து பலமுறை பள்ளியை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்திருக்கின்றனர். மாணவர்களிடமும் இவர்கள் இருவரின் இடையே இருக்கும் உறவு குறித்து சலசலப்பு நிலவி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. 

பள்ளி மாணவனின் பெற்றோர் அளித்த புகாரில், "எட்டாம் வகுப்பு படிக்கும் தனது 14 வயது மகனை அதே பள்ளியில் பணி புரியும் 26 வயது ஆசிரியை ஆசை வார்த்தைகள் காட்டி, தன்னுடன் இழுத்து சென்றிருக்கிறார். மாலை 7 மணி அளவில் நான் வீட்டிற்கு வந்தபோது தனது மகன் காணவில்லை எனவும், நான்கு மணி வாக்கில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மனைவி கூறினார்.

அதன்பிறகு அக்கம்பக்கத்தில் மற்றும் நண்பர்களிடத்தில் விசாரித்தபோது அங்கு வரவில்லை என தெரிய வந்தது. அதன் பின்னர் ஆசிரியர் மற்றும் தனது மகன் இடையே இருந்து வந்த பழக்கம் தெரியவந்தது. இது குறித்து போலீஸிடம் புகார் அளிக்க முடிவு செய்தோம்."என குறிப்பிட்டுள்ளனர்.  புகாரை எடுத்துக் கொண்ட போலீசார், ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.