மிகப்பெரிய சவக்குழி! ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 50 பேரின் சடலங்கள்! எலும்புக் கூடுகளாக சிக்கிய பயங்கரம்! எங்கு தெரியுமா?

மிகப்பெரிய சவக்குழியிலிருந்து 50 பேரின் பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவமானது மெக்சிகோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மெக்சிகோ நாட்டின் மேற்கு திசை புறநகரில் குவாடலஜாரா என்னுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள பண்ணை இடத்திற்கு அருகே நிறைய பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. 

நீங்க கொலைகள் தொடர்பான குற்ற சம்பவங்களினால் குறிப்பிட்ட மாகாணம் பொருளாதாரத்தில் பெரியளவிற்கு குறைந்ததாக கூறப்படுகிறது. 3 வாரங்களுக்கு முன்னர் இந்த புறநகர் பகுதியில் ஒரு மர்ம இடம் கண்டுபிடிக்கப்பட்டது. 

மர்மக்குழியில் 13 பேரின் சடலங்களை காவல்துறையினர் வெளியே எடுத்துள்ளனர். அவர்களில் 12 பேர் ஆண்கள் மற்றும் ஒருவர் பெண்ணாவார். இவர்களுடைய அடையாளங்களை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே புறநகர் பகுதியில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதியன்று 34 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், மே மாதத்தில் 30 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

வருட தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட 2500 கொலைகள் இந்த புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த புறநகர் பகுதியில் மிகவும் கொடூரமான ஜலிஸ்கோ நியூவா தலைமுறை கார்டெல் என்ற கூலிப்படை இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியானது மெக்சிகோ நாட்டின் மக்களை பெரிதளவில் பாதித்துள்ளது.