குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 250 தாய்மார்கள் தங்களுடைய தாய்ப்பாலை குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
3 மாதங்கள்..! 12 லிட்டர்..! தாய்ப் பால் தானம் செய்து உயிர் காக்கும் இளம் தாய்..! நெகிழ்ச்சி சம்பவம்!
மர்ஃபதியா என்ற பெண் கடந்த 3 மாதங்களில், தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்குப் போராடும் ஐந்து குழந்தைகளைக் காப்பாற்ற தனது பாலை நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார். இந்தக் குழந்தைகளின் தாய்மார்களுக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததால், குழந்தைகளுக்குப் பாலூட்ட முடியவில்லை. எனவே மர்ஃபதியா தானமாக அளித்த தாய்ப்பால் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளது.
இதுகுறித்து மர்பதியா தெரிவிக்கையில் எனது குழந்தைக்கு தேவையான அளவை விட அதிக அளவில் எனக்கு பால் சுரந்தது. எனவே நோய்வாய்ப்பட்ட அல்லது தேவைப்படும் குழந்தைக்குப் பால் தானம் செய்யலாம் என முடிவு செய்தேன். மருத்துவமனைகள் மூலம் தாய்ப்பால் வங்கி இருப்பதை தெரிந்து கொண்டேன். பின்னர் என் மகனுக்குக் கொடுத்த பால் போக அதிகமாகச் சுரக்கும் பாலைத் தானம் செய்து வருகிறேன். 3 மாதங்களில் 12 லிட்டர் தானம் செய்துள்ளேன் என்றானர்.
இந்தத் தாய்ப்பால் வங்கி மூலம் 250 தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலை தானம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 90 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்துள்ளது. இவர்களின் கருணை மிகுந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்குத் தாய்ப்பாலை விட பாதுகாப்பான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வேறு எதுவும் இல்லை. குறை மாதத்தில் பிறந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாகத் தாய்ப்பால் சுரக்கும் தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலைப் தானம் அளித்து அவர்களைக் காப்பாற்றும் செயல் தற்போது பெருகி வருகிறது.