25 வயது இளைஞரின் பெல்லி டான்ஸ்! இளம் பெண்களை சொக்க வைக்கும் தரமான ஆட்டம்!

ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கே உரித்தான பெல்லி நடனத்தில் சமுகத்தின் ஏளனம், பெண் கலைஞர்களின் போட்டி அனைத்தையும் கடந்து சக்கை போடுபோட்டு வருகிறார் ஒரு இளைஞர்.


இடையசைவு நளினம் பெண்களுக்குமட்டுமல்ல; பெல்லி நடனத்தில் போட்டியிடும் இளைஞர் 

25 வயது இளைஞரான தெலு ஸ்ரவண் குமாரருக்கு சிறு வயது முதலே கிளாசிக்கல் நடனத்தில் ஆர்வம் அதிகம் என்பதால் அவருக்கு நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் ஒரு ரசிகர் வட்டாரம் இருந்தது. இந்நிலையில் கல்லூரியில் படித்த காலத்தில் அவர் கலை இலக்கு திசை மாறியது. 

பெண்கள் நளினமாகவும், கவர்ச்சியாகவும், இடையையும், வயிற்றையும் ஆட்டி ஆடும் பெல்லி நடனத்தின் மீது தீராத தாகம் ஏற்பட்டது. பிரபல பெல்லி நடனக் கலைஞரான மெஹர் மாலிக் நடனங்களை யூ டியூப்பில் பார்த்து கற்றுக் கொள்ளத் தொடங்கினார். 

இதற்கு முதல் எதிரியே கிளாசிகல் நடனக்கலைஞரான ஸ்ரவனின் தாயார் தான். இந்நிலையில் யூ டியூபில் மட்டுமே பெல்லி நடனத்தை கற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த ஸ்ரவன் தொடர்புடைய வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினார். அங்கு பெண்களுடன் சேர்ந்து நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது ஒரு திருநங்கையைப் பார்க்கும் கண்ணோட்டத்துடன் சமூகத்தின் ஏளனமும் தொடர்ந்தது. 

நடனம் ஆடும் இடங்களில் பெண்களுக்கு இணையாக போட்டி போட்டு நடனமாட அவர் பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. இந்நிலையில் விஜயவாடாவில் அவரது முதல் அரங்கேற்றம் நடைபெற்ற போது ஆண் ஒருவர் இடையை அசைத்து ஆடிய பெல்லி நடனம் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அவர் ஏன் கிளாசிக்கல் நடனக் கலைஞராகவே தொடரக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியவர்களே அதிகம்

மேலும் ஸ்ராவண் தான் படித்த கல்லூரியில் நடன நிகழ்ச்சிகளை நடத்திய போது சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளாகத் தவறவில்லை. அனைத்தையும் கடந்து பெல்லி நடனத்தில் சாதித்து வரும் ஸ்ரவண் சிறப்பு வாய்ந்த பாயல் நடன அகாடமியில் உறுப்பினராகியுள்ளார். பெல்லி நடனத்தை ஏன் ஆபாசமாகக் காண வேண்டும் என்றும் அதையும் கிளாசிக்கல் நடனத்தைப் போன்று கலை நுணுக்கத்துடன் பார்க்கலாமே என்கிறார் ஸ்ரவண். எதிர்காலத்தில் பெல்லி நடனத்துறைக்கு ஆண்கள் அதிக அளவில் வரவேண்டும் என்பது அவரது ஏக்கமாக உள்ளது.