13 வயது மாணவனுடன் செக்ஸ் உறவு! 25 வயது ஆசிரியை அரங்கேற்றிய கேவலமான செயல்!

அரிசோனா: பள்ளி மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்திருந்த ஆசிரியைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


அரிசோனாவில் பிரிட்டனி ஸ்மோரா என்பவர் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 27 வயதாகும் இவருக்கு திருமணமான நிலையில், கட்டுப்படுத்த முடியாத காம உணர்ச்சியால் பீடித்திருந்துள்ளார். தனது காமத்தை தீர்த்துக் கொள்ள, தன்னிடம் படிக்கும் 13 வயது மாணவனை அவர் குறி வைத்து, வலையில் வீழ்த்தியிருக்கிறார். 

வகுப்பறையில், காரில், வீட்டில் என நினைத்த இடங்களில் எல்லாம் அந்த மாணவனுடன் இஷ்டம் போல ஸ்மோரோ உடலுறவு செய்து வந்திருக்கிறார். இதனால், அந்த மாணவனின் படிப்புத் திறன் குறைந்து போனதால், அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி மாணவனின் செல்ஃபோனை ஆய்வு செய்த பெற்றோர் அதில், ஆசிரியை அனுப்பிய ஆபாச மெசேஜ்கள், படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவனிடம் விசாரித்தபோது, உண்மையை சொல்லியுள்ளான். இதன்பேரில், மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். 

அமெரிக்காவில் மைனர் வயது சிறுவர், சிறுமியருடன் செக்ஸ் மேற்கொள்வது சட்டப்படி தவறாகும். எனவே, குறிப்பிட்ட பள்ளி ஆசிரியை கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது. தற்போது குற்றம் உறுதி செய்யப்பட்டு, ஆசிரியை ஸ்னோராவுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.