கணவன் வெளிநாட்டில்..! அவனது நண்பனுடன் சேர்ந்து தீக்குளித்த 25 வயது கார்த்திகா! தஞ்சை பகீர்!

தஞ்சை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்கண்ணு என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில், நேற்று ஏதோ மனஉளைச்சலில் இருந்த கார்த்திகா திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

எரிச்சல் தங்க முடியாமல் "காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்" என கதறியிருக்கிறார்.  அவ்வழியாக சென்ற ராஜ்கண்ணுவின் நண்பர் கலியமூர்த்தி, உடனடியாக உள்ளே சென்ற காப்பாற்றி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். கலியமூர்த்தி-க்கும் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக, கார்த்திகா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

கலியமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். திருமணமான 7 ஆண்டுகளில் தற்கொலை செய்ய காரணம் என்ன என பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.