9 வயது சிறுவனை கற்பழித்த 25 வயது பெண்!

கேரள மாநிலத்தில் 9 வயதுச் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததாக 25 வயதுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


கேரள மாநிலம் கடப்பாராவைச் சேர்ந்த 9 வயதுசிறுவனுக்கு புற்று நோய் இருக்கிறது. இதனால் அவனை அவனது பெற்றோர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இப்படி கடந்த முறை மருத்துவமனைக்கு சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

 

அப்போது பெண் மருத்துவர் ஒருவர் சிறுவனை பரிசோதித்துள்ளார். ஆனால் சிறுவன் அதற்கு ஒத்துழைக்க மறுத்துள்ளான். ஏன் என்று காரணம் கேட்ட போது தனது தாயின் தோழியான ராஜி என்பவர் தன்னிடம் இப்படி நடந்து கொள்வதாகவும், ஆனால் தனக்கு அது பிடிக்கவில்லை என்று சிறுவன் கூறியுள்ளான்.

 

மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது ஆடைகளை களையச் செய்து ஏதேதோ ராஜி செய்வதாகவும் இதனால் தனக்கு மர்ம உறுப்பில் வலி இருப்பதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். இதனை கேட்டு அதிர்ந்த மருத்துவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

 

சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு நேர்ந்ததை சிறுவன் விவரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ பரிசோதனையில் சிறுவன் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது.

 

இதனை அடுத்து சிறுவனின் தாயின் தோழியான 25 வயதான ராஜி என்கிற பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்ற பொய் என ராஜியின் கணவர் ராய் தெரிவித்துள்ளார்.

 

தனது மனைவிக்கும், சிறுவனின் தாய்க்கும் பணம் கொடுக்கல் - வாங்கலில் தகராறு இருப்பதாகவும், அந்த விரோதத்தில் தனது மனைவி மீது சிறுவனின் தாய் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

 

ஆனால் சிறுவன் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். எனவே தான் ராஜி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

சிறுவர்கள் புகார் தெரிவிப்பதில்லை என்றும் அவ்வாறு புகார் தெரிவித்தால் அவன் சிறுவனே அல்ல என்றும் அவர் கூறினார்.