19 வயது இளம் பெண்ணை கற்பழித்த 25 வயது இளம் பெண்! கேட்போரை அதிர வைத்த சம்பவம்!

19 வயது இளம் பெண்ணை கற்பழித்ததாக 25 வயது இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.


டெல்லி தில்சத் காலனியை சேர்ந்தவர் மரியம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 19 வயதான இவரை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர். அத்துடன் தில்சத் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மரியத்தை அடைத்து வைத்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த 25 வயது பெண் ஒருவர் மரியத்தை கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்துள்ளார். 25 வயது பெண் 19 வயதான மரியத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்ள செக்ஸ் டாய் எனப்படும் உபகரணத்தை பயன்படுத்தியுள்ளார்.

மேலும் மரியத்தை கற்பழிக்கும் போது அதனை வீடியோவாகவும் அங்கிருந்த ஒருவன் எடுத்துள்ளான். இதனை தொடர்ந்து அந்த வீடியோவை வைத்து மரியத்தை 25 வயது பெண்ணும், வேறு சிலரும் மிரட்டியுள்ளனர். ஆனால் இதற்கு பணியாத மரியம் காவல் நிலையம் சென்றுள்ளார்.

ஆனால் ஒரு பெண்ணை எப்படி மற்றொரு பெண் கற்பழிக்க முடியும் என்று கூறி வழக்கு பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்து வந்தனர். இந்த விவகாரம் ஊடகங்களின் கவனத்தை பெற்றதை தொடர்ந்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர் டெல்லி போலீசார்.

மேலும் மரியத்தை கற்பழித்த 25 வயது பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவரை கற்பழித்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளது விநோதமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.