கொஞ்சம் இடம் கொடுத்தா என்னடா பண்ற? 17 வயது கல்லூரி மாணவியை தொடக் கூடாத இடத்தில் தொட்ட 25 வயது இளைஞன்! திருமங்கலம் பரபரப்பு!

கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருமங்கலம் அருகே சமத்துவபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் சிலம்பரசன். சிலம்பரசனின் வயது 25. இவர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்திற்கு ஏஜென்டாக வேலை பார்த்து வருகிறார்.

சமத்துவத்திற்கு அருகேயுள்ள கட்ராம்பட்டி எனுமிடத்தில் ஜெயபாலன் உறவினர் வசித்து வருகின்றனர். உறவினர்களை பார்ப்பதற்காக சிதம்பரம் அங்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயதான கல்லூரி பெண்ணுடன் சிலம்பரசனுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த இளம்பெண் இந்த நெருக்கத்தை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் சிலம்பரசன் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியில் தொடர்ந்து அத்துமீறி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்து கொள்ள இயலாமல், அந்த இளம்பெண் கட்ராம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி சிலம்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.