ஆடைகளை களைந்த போது அழுதாள்! கொன்றுவிட்டேன்! போலீசை அதிர வைத்த சிறுமியின் தாய் மாமன்!

2.5 வயது சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக குழந்தையின் தாய்மாமன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் அன்னூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள கரியகவுண்டனூரை சேர்ந்த தம்பதியினருக்கு  2.5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் விளாங்குறிச்சியில்வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமியின் பாட்டி வீட்டுக்கு நேற்று முன்தினம் அவரும் அரும்பதாவும் சென்றனர். தந்தை தன்னுடைய வேலை நிமித்தமாக வெளியூர் சென்றார். மறுநாள் அதிகாலை 2:30 மணிக்கு சிறுமிக்கு பாலூட்டினார் தாயார். சில மணி நேரம் கழித்து குழந்தையை காணவில்லை என்று அலறியடித்துக்கொண்டு பயந்தார். 

உறவினர்கள்  தேடி அலைந்தனர். சில கிலோமீட்டர் தொலைவில் கருவேலங்காடு பகுதியில் கிணறு ஒன்று உள்ளது. அந்தப் பாழடைந்த கிணற்றில் குழந்தை சடலமாக இருந்ததைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர். பின்னர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்த தகவலானது பீளமேடு காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் வழக்கினை தொடர்ந்தனர். அன்றிரவு குழந்தையின் பாட்டி வீட்டில் இருந்த அனைவரையும் விசாரித்துள்ளனர். 

விசாரணையின் இறுதியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது குழந்தையின் தாய்மாமன் பாலியல் ரீதியில் துன்புறுத்த குழந்தையை தூக்கி சென்றதாகவும், ஆடைகளை களைந்த போது சிறுமி அழுததாகவும் இதனால் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டதாகவும் கூறியுள்ளான் அந்த பாதகன்.  

இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே அதிர்ந்து போயுள்ளனர்.  வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தையின் மாமாவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவமானது பீளமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.