ஒரு கையில் அரிவாள் மறு கையில் மனைவியின் தலை! ஆக்ரோஷ நடைபோட்ட கணவன்

ஆந்திராவில் மனைவியை தலையை வெட்டி கொலை செய்து அந்த தலையுடன் கணவன் வீதிகளில் வலம் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே சத்தியநாராயணபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது ஸ்ரீநகர் பகுதி. இங்கு மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த 24 வயது இளைஞர் ஒருவர் உள்ளூரில் செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தண்டனைக் காலம் முடிந்து வெளியில் வந்த அந்த இளைஞர் நேராக மனைவி வாழ்ந்து வரும் வீட்டிற்கு கையில் அரிவாளுடன் சென்றார்.

அங்கே மனைவியின் தலையை ஒரே சீவாக சீவி கொலை செய்த அந்த இளைஞர் மிகவும் ஆக்ரோஷத்துடன் ஒரு கையில் மனைவியின் தலையும், மற்றொரு கையில் மனைவியை வெட்டிய அரிவாளுடன் அங்கிருந்த சாலைகளில் வேகமாக ஓடினார்.

பின்னார் எலூறு என்னுமிடத்தில் உள்ள கால்வாயில் அரிவாள் மற்றும் தலையை போட்டுவிட்டு நடக்கத் தொடங்கினார். அப்போது அந்த வழியே வந்த ரோந்து போலீசார் இளைஞர் ரத்தக் கறையுடன் இருந்த சட்டையை பார்த்து விசாரிக்க தான் மனைவியை கொன்று தலையை கால்வாயில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.

பின்னர் இளைஞரை கைது செய்த போலீசார் கால்வாயில் வீசப்பட்ட அரிவாள் மற்றும் கொல்லப்பட்ட பெண்ணின் தலையை தேடிவருகின்றனர். மேலும் வீட்டில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி மருத்தவமனை அனுப்பி வைத்தனர். இளைஞர் ஆக்ரோஷமாக மனைவின் தலையுடன் ஓடிய சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதை பார்த்த உள்ளூர் வாசிகள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.