டீச்சர், நீங்கள் என்னை கற்பழித்ததை நான் மறக்கமாட்டேன்! 23 வயது ஆசிரியைக்கு 16 வயது மாணவன் அனுப்பிய எஸ்எம்எஸ்! அதிர்ச்சி சம்பவம்!

டெக்சாஸ்: 16 வயது மாணவனை டீச்சர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாசாடினா பகுதியில் செயல்படும் சாம் ரேபர்ன் ஹைஸ்கூலில் ஆசிரியை பணிபுரிபவர் ஒலிவியா ஹர்டா. 23 வயதான இவர், தன்னிடம் படித்து வந்த 16வயது மாணவனை பலாத்காரம் செய்திருக்கிறார். எனினும், இந்த சம்பவத்தை அச்சிறுவனால் மறக்க முடியாமல், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறான்.

இதனை கண்டுபிடித்த அவனது பெற்றோர் போலீசில் புகார் கூற, டீச்சரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குறிப்பிட்ட டீச்சர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

இதனிடையே அவர் போலீசில் சிக்கியது எப்படி என்பதற்கான ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், பாதிக்கப்பட்ட சிறுவனின் செல்ஃபோனை ஆய்வு செய்தபோது அதில், டீச்சர் அனுப்பிய பல மெசேஜ்களும், அதற்கு சிறுவன் அனுப்பிய பதிலும் இடம்பெற்றிருந்தன. ஒரு மெசேஜில், ''நீங்கள் என்னை பலாத்காரம் செய்த நாளை என்னால் மறக்க முடியாது,'' என்று, சிறுவன் கூறியிருந்தான்.

இதைக் காட்டி விசாரித்தபோதுதான் ஆசிரியை தனது தவறை ஒப்புக் கொண்டார். அவசர கதியில் அந்த காரியத்தை செய்ய நேரிட்டதாகவும் அவர் போலீசில் கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.