23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த 60 வயது தாத்தா! வெளியே கூற முடியாத டார்ச்சர்! பிறகு நடந்த தரமான சம்பவம்!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட 60 வயது முதியவர் தன்னை சித்திரவதை செய்ததாகவும் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்ததாகவும் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தர்கா ஒன்றில் வேலை செய்தவர் 60 வயதான சலீமுதீன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 23 வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது கணவரின் சித்திரவதைகள் எல்லை மீறி செல்வதாகவும் அவர் தன்னை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது திருமணமான ஒரே மாதத்தில் இருந்தே சலீமுதீன் தனது இளம் மனைவியை வெகுவாக சித்திரவதை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர் தன்னை உடனுக்குடன் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்ததாகவும் அந்தப் பெண் புகார் அளித்தார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டம் நிறைவேறியதை அடுத்து அந்த சட்டப்பிரிவில் போலீசார் சலீமுதீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.