23 வயது கொத்தனார் செல்வம்! 40 வயது சித்தாள் ஜெயா! கும்பகோணம் லாட்ஜ்! ரூமுக்குள் இருந்து வந்த அலறல்! அங்கே காத்திருந்த அதிர்ச்சி!

கும்பகோணத்தில் லாட்ஜில் ரூம் போட்டு தங்கி இருந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருபவர் செல்வம். இவருக்கு வயது 23. கொத்தனார் வேலை செய்யும் ஜெயா ( வயது 40) என்ற பெண் கணவரை இழந்து வறுமையில் இருந்ததால் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். செல்வத்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் ஜெயாவிற்கு அவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயாவுக்கும் செல்வதற்கும் இடையே பழக்கம் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. நாளடைவில் அவர்களது பழக்கமானது கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனையடுத்து இருவருமே கும்பகோணத்தில் இருக்கும் லாட்ஜ் ஒன்றில் ரூம் போட்டு தங்கி உல்லாசமாக இருப்பதை தங்களுடைய வாடிக்கையாக கொண்டு இருந்தனர். வாரம் முழுக்க ஒன்றாக வேலை பார்த்துவிட்டு வார இறுதியில் இருவரும் ரூம் போட்டு ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே இந்த லாட்ஜுக்கு அடிக்கடி வந்து செல்வதால் அங்கிருக்கும் அனைவருக்கும் இவர்கள் நல்ல பழக்கமாக மாறி உள்ளனர். 

இதற்கிடையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். இது குறித்து இருவரது வீட்டிற்கும் தெரியவர பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது. செல்வம் வீட்டை பொருத்தவரையில், 23 வயதே ஆகும் இளைஞர் ஒருவர் 40 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். அதேபோல் ஜெயா வீட்டிலும் வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு உன்னை விட வயதில் சிறிய வரை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா என்று கேட்டுள்ளனர். இதனால் இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால் மனமுடைந்து போன இருவரும் எப்போதும் போல் கும்பகோணத்தில் இருக்கும் லாட்ஜில் ரூம் போட்டு தங்கி இருந்துள்ளனர். இதனையடுத்து இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். கடைசியில் விஷம் அருந்தி இருவரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். விஷம் குடித்த பின்பு தான் இருவருக்கும் உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருமே அலறி கூப்பாடு போட்டு உள்ளனர். 

அறையிலிருந்து வந்த அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அறைக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் விஷத்தை அருந்தி விட்டு உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். லாட்ஜ் நிர்வாகிகள் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து அவர்கள் இருவரையும் அங்கிருந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது செல்வம் மற்றும் ஜெயா ஆகிய இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.