3 ஆண் நண்பர்கள்! பாரில் குடி கூத்து! பிறகு விமான பணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

மும்பையில் தங்கும் விடுதியில், விமான பணிப்பெண்ணை அதே விமான நிலையத்தில் செக்யூரிட்டி அதிகாரியாகப் பணிபுரிபவர் நண்பர்களுடன் கற்பழித்துள்ளார்.


மும்பையில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றும் 23 வயது பெண்ணை அதே விமான நிலையத்தில் பணியாற்றும் செக்யூரிட்டி அதிகாரி மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து கடந்த திங்கட்கிழமை அன்று அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார்  அதை விமான நிலையத்தில் பணியாற்றும்  செக்யூரிட்டி அதிகாரியான படோநியா 23 என்பவரை கடந்த புதன்கிழமை அன்று கைது செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது நண்பர்களான மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த அந்த பெண்மணி ஹைதராபாத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை அன்று மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் இன்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு 7 மணி அளவில் வந்துள்ளார் அப்போது அவரை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்தில் செக்யூரிட்டி அதிகாரியாக உள்ள படோநியா என்பவர் வந்துள்ளார்.

இதையடுத்து இருவரும் ஒரே காரில் சென்றுள்ளனர். இதையடுத்து  அப்பெண்ணை ஒரு மால் அருகே இறக்கி விட்டுவிட்டு அங்கேயே சிறிதுநேரம் இருந்துள்ளார் அப்பெண் தனது உடைமைகளை வீட்டில் வைத்து விட்டு திரும்பவும் அவரது காருக்கு சென்றுள்ளார்.இதையடுத்து அவரது நண்பர்கள் இருவரும் வந்துள்ளனர் பின்னர் 4 பேரும் சேர்ந்து அருகிலுள்ள பாருக்கு சென்று மது அருந்தியுள்ளனர்

இந்நிலையில் படோநியா அதிக அளவு மது அருந்தியதால் தட்டுத்தடுமாறி தனது சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை வீட்டில் இறக்கி விடு சென்றபோது மூவரும் அப் பெண்ணை தாக்கி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றும் தலைமறைவாக உள்ள இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.