லாட்ஜ் அறையில் 23 வயது இளம் பெண்! கட்டிலுக்கு அடியில் 57 வயது முதியவர்! அதிர்ச்சியில் போலீஸ்!

விபச்சாரம் அதிகளவில் நடைபெறும்  பிரபல லாட்ஜில் விபச்சார அழகியையும் முதியவரையும்  காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் ராம்நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பிரபல லாட்ஜ் ஒன்றில் பிரமாண்ட அளவிற்கு விபச்சாரம் நடப்பதாக கோட்டூர் பகுதி காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நள்ளிரவில் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரான சுமித்ரா ஒரு தனிக் குழுவை அமைத்து ரகசியமாக அந்த லாட்ஜுக்கு செல்ல திட்டமிட்டனர்.

பின்னர் அதிரடியாக லாட்ஜ்க்குள் நுழைந்து சோதனை நடத்தினர். முதல் அறைக்குள் நுழைந்த போது 23 வயதில் விபச்சார அழகி ஒருவர் இருந்தார். அவர் அமர்ந்திருந்த கட்டிலின் அடியில் பார்த்தபோது 57 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இருந்தார். விசாரித்ததில் அந்த முதியவர் லாட்ஜின் மேனேஜரான மனோகரன் என்பது தெரியவந்துள்ளது. 

லாட்ஜ்க்குள் காவல்துறையினர் நுழைந்ததை அறிந்த பிற அறைகளில் இருந்த விபச்சார அழகிகள் மற்றும் உல்லாசம் அனுபவிக்க வந்தவர்கள் புயல் வேகத்தில் ஓடினர். காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயன்ற போதும் இயலவில்லை. நள்ளிரவு என்பதால் இருட்டில் மறைந்து சென்றனர். 

இப்படிப்பட்ட அழகி மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மனோகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். 

இந்திய நாட்டின் பெரும்பாலான விபச்சார விடுதிகளுக்கு பெண்களை சப்ளை செய்யும் சிக்கந்தர் என்பவருக்கு தொடர்பு உள்ளது என்பதை கூறியுள்ளார். தலைமறைவான ஹோட்டல் மேனேஜர் சலீம் மீதும் சிக்கந்தர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.