23 வயது பெண் கடத்தல்! 6 பேர் மாறி மாறி கற்பழித்தனர்! கல்யாண வீட்டில் கொடூரம்!

23 வயதுப் பெண் 6 நபர்களால் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் இளம்பெண் 6 நபர்களால் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

முசாஃபர் நகர் அருகே தூத்லி என்ற கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினர் துணையின்றி தனியாக ஒரு திருமணத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் பாதுகாப்பின்றி தனியாக வந்திருப்பதை நோட்டமிட்டுத் தெரிந்துகொண்ட மர்மநபர்கள் அந்தப் பெண் அறியாமல் பின் தொடர்ந்த்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமண வீட்டில் எவர் கண்ணிலும் படாத இடத்தையும் எவரது கவனமும் பதியாத ஒரு தருணத்தையும் பயன் படுத்தி அந்தக் கும்பல் அந்தப் பெண்ணைக் கடத்தியது. மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் அந்த இளம்பெண்ணை வேறு ஒரு இடத்துக்கு கடத்திச்  சென்றது.

அங்கு வைத்து அந்தக் கும்பல் தன்னைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் தப்பிச் சென்றதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். மேலும் நடந்ததை எவரிடமாவது தெரிவித்தால் பெண்ணின் குடும்பத்துக்கு தீங்கு நேரும் என அந்தக் கும்பல் மிரட்டிவிட்டுச் சென்றதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். 

அந்தப் பெண் கூறிய விவரங்களை அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் தெரிவித்து புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்புடைய 6 நபர்களையும் தேடி வருகின்றனர்.