23 வயது இளம் விதவை! மறைந்த கணவன் நினைவாக வருடா வருடம் புதிய காதலனுடன் சேர்ந்து மனைவி செய்யும் செயல்!

இறந்துபோன கணவரின் நினைவில் புகைப்படங்களை எடுத்து கொண்டிருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கனடா நாட்டில் சஸ்கட்சேவான் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு எரிக் என்பவர் வசித்து வந்தார். இவரும் இவருடைய பள்ளித்தோழியான வனீஷா என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2012-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களுக்கு இருவரும் எந்தவித சண்டை சச்சரவுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

2-வது திருமணநாளை இருவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர். ஆனால் எதிர்பாராவிதமாக 2014-ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் எரிக் வாகன விபத்தில் இறந்து போனார்.

இதனால் வனீஷா மிகவும் மனமுடைந்தார். மேலும் தன் கணவன் மீது கொண்ட ஒப்பற்ற அன்பினால் மறுமணம் செய்து கொள்ளும் முடிவை தகர்த்தார். 23 வயதிலேயே விதவையான வனீஷா தன் கணவரின் நினைவுகளை தன்னுடன் வைத்துக் கொள்வதற்கு நிறைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஒவ்வொரு வருடத்தின் திருமண நாளன்றும், புதுமண உடை உடுத்தி வனீஷா புகைப்படங்களை எடுத்து தன்னுடைய கணவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எரிக் எப்பொழுதும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க எண்ணினார். ஒவ்வொருவரும் தங்களுடைய திருமண நாளை புத்தாடை அணிந்து கணவருடன் கொண்டாடுவர்.

ஆனால் கணவனை இழந்து இருப்பதால் பரிதாபமான நிலையில் உள்ளேன். ஆனால் நான் பரிதாபமாக இருப்பது என் கணவர் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆதலால் ஒவ்வொரு திருமணநாளன்றும் புத்தாடைகள் அணிந்து என் கணவருக்கு மரியாதை செலுத்துவேன்" என்று கூறியுள்ளார்.

இவருடைய இத்தகைய செயல்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.