இமாச்சலப் பிரதேசத்தில் திருமணத்திற்காக பேருந்தில் சென்றபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிவேகம்..! பயங்கர வளைவு! மல்லாக்க கவிழ்ந்த பஸ்! 23 பேரின் கதி?
இமாச்சலப் பிரதேசம் சிர்மோர் மாவட்டத்தில் உள்ள ஐங்கா பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது உறவினர்களுடன் திருமணத்திற்கு செல்வதற்காக கிளம்பியுள்ளனர். அப்போது தனியார் பேருந்து ஒன்று வாடகைக்கு எடுத்து அதில் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பேருந்து கிரிபுல்லுக்கு அருகில் உள்ள மரியோக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிரே வாகனம் ஒன்று வந்துள்ளது. இதனால் ஓட்டுநர் பேருந்தை ஒருபுறமாக வளைத்துள்ளார்.இந்நிலையில் பேருந்தின் சக்கரம் அங்கு இருந்த கல்லின் மேல் ஏறியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகிலிருந்த பள்ளத்திற்குள் ஓடத் தொடங்கியது.
இதையடுத்து பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 23 பேர் பலத்த படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து பேருந்து கவிழ்ந்ததால் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே ஓடி வந்து பார்த்துள்ளனர். பிறகு விபத்தில் காயம்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காயம் பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்த இருவரின் நிலை மட்டுமே கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.