அவனுக்கு என்னை விட 2 வயசு குறைவு..! ஆனாலும் அவன் என்னை யூஸ் பண்ணிகிட்டான்..! 24 வயது இளம் பெண் காவல்நிலையத்தில் கதறல்!

மதுரையில் 22 வயது இளைஞர் ஒருவர் திருமணம் கொள்வதாக கூறி 24 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இளைஞரை கைது செய்துள்ளனர்.


மதுரை மாவட்டத்தில் கீழக்குடியை அடுத்து கரடிபட்டி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வேல்முருகன் (வயது 22) என்ற ஒரு இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே வேல்முருகன் அவர் வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். அதிக சமயங்களில் தனிமையிலும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று வேல்முருகன் மீது அந்தப் பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அந்த பெண் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில், 24 வயதாகும் என்னை 22 வயதாகும் வேல்முருகன் காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறியிருக்கிறார். என்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார்.

ஆகையால் வேல்முருகனை கைது செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு போலீசிடம் அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வேல்முருகனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.