உங்களுக்கு அந்த நோய் இருக்கு..! 22 வயது பெண்ணின் மண்டையை பிளந்த டாக்டர்கள்..! ஆனால் கடைசியில் தெரிய வந்த உண்மை!

லண்டன்: இளம்பெண்ணுக்கு மனச்சிதைவு நோய் என்று மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்தில் உள்ள யோவில் பகுதியை சேர்ந்தவர் லாரா ஸ்கெரிட். 22 வயதான இவர், கடந்த 2017ம் ஆண்டு  உடல்நலமின்மை காரணமாக மருத்துவமனை சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மனச்சிதைவு நோய் இருப்பதாகக் கூறி அதற்குரிய சிகிச்சை மற்றும் மருந்துகளை அளித்தனர்.

ஆனால், 2 ஆண்டுகள் கடந்த நிலையில், அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நீச்சல் பயிற்சிக்காகச் சென்ற லாரா, திடீரென ஒருநாள் மயங்கி விழுந்தார். அதன்பிறகு, அவரது மூளையில் ஸ்கேன் பரிசோதனை செய்ததில், மூளையில் பெரிய கட்டி இருப்பதாக தெரியவந்தது. டென்னிஸ் பந்து அளவுக்கு இருந்த கட்டி லாரா உள்பட அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனை கண்டுபிடிக்காமல் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்து வந்ததாக, லாரா வேதனை தெரிவித்தார்.  

இதையடுத்து, தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவ ஓய்வில் லாரா உள்ளார். முன்கூட்டியே இந்த பாதிப்பை மருத்துவர்கள் கண்டுபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.