தூங்கி எந்திரிச்சி பார்த்தேன்..! முகமெல்லாம் சூட்டு கொப்பளம்..! கதறிய இளம் பெண்! டாக்ர் சொன்ன பகீர் காரணம்!

கீவ்: வேறு நாட்டில் குடியேறியதால் வந்த மன உளைச்சலில் பெண்ணின் முகம் வீணாகியுள்ளது.


உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் மரியா பிலென்கா (22 வயது). இவர், கடந்த 2019ம் ஆண்டு ஜெர்மனியில் குடியேறினார். ஆனால், தாய்நாட்டை விட்டு நீண்ட தொலைவில் வசிப்பதால் ஏற்பட்ட அதீத மன அழுத்தம், கவலையால் அவரது முகம் முழுக்க முகப்பரு வெடிக்க தொடங்கியது. இது சில நாட்களில் சரியாகிவிடும் என மரியா நினைத்தாலும், நாள் பட நாள் பட முகப்பரு முகம் முழுக்க பரவி, சிவப்பு தழும்புகளாக மாறி, முகத்தின் அழகே பாழாகிவிட்டது.

இதுபற்றி மருத்துவர்களிடம் ஆலோசித்த அவர், உரிய பலன் கிடைக்கவில்லை என்று புலம்புகிறார். இதன்பேரில், தனது முகத்தை பற்றி செல்ஃபி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள மரியா, விரைவில் உக்ரைன் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். பருவ வயது காரணமாக, முகப்பரு வருவது சகஜம்தான் என்று பலரும் கூறினார்கள்.

ஆனால், 22 வயதான பிறகும், டீன் ஏஜ் வயதை கடந்த பிறகும் முகப்பரு நிற்கவில்லை. இதற்கு பிறந்த மண்ணை பிரிந்து வாழும் கவலையே காரணம் என்று, மரியாவை பரிசோதித்த மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். அதை மேற்கோள் காட்டும் மரியா, தனது வாழ்வு, தாய்நாட்டை பிரிந்து வாடுவோருக்கு ஒரு நல்ல உதாரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.