முத்தலாக் தடுப்பு சட்டம் நிறைவேற்றிய போதும் உத்தரபிரதேசத்தில் தொலைபேசியில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்த கணவன் அவரை எரித்தும் கொலை செய்துள்ளார்.
17 வயதில் நிக்காஹ்! 22 வயதில் தலாக்! தட்டிக் கேட்ட நபீசாவை உயிரோடு கொளுத்திய கணவன் குடும்பம்!

மும்பையில் வேலை செய்து வரும் நபீஸ் என்ற இளைஞருக்கு உத்தர பிரதேச மாநிலம் சிரவங்கி மாவட்டத்தில் உள்ள கட்ரா கிராமம் சொந்த ஊர். இவருக்கு சயீதா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.
இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப ரீதியாக சண்டை வருவதும் பின்னர் சமாதானம் ஆவதும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே மும்பையில் இருந்து தொலைபேசி மூலமே மனைவி சயீதுக்கு முத்தலாக் எனக் கூறி விவகாரத்து செய்வதாக கூறினார்.
இதனால் மனம் உடைந்த சயீதா முத்தலாக்குக்கு எதிராக மத்திய அரசு சட்டம் இயற்றி உள்ள நிலையில் தன் கணவர் தொலைபேசியில் முத்தலாக் கூறியதாகவும் இதனால் தன்னுடைய வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் கண்ணீர் மல்க புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த புகாரை போலீசார் சீரியஸாக கருத்தில் கொள்ள வில்லை எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே மனைவி மீது கோபத்தில் இருந்த நபீஸ் தன் மீது போலிசில் புகார் அளித்ததால் சொந்த ஊருக்கு சென்று மனைவி சயிதிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நபீசின் தாய், தந்தை, சகோதரிகள் அனைவரும் சேர்ந்து சயீத்தை அடித்து உதைத்து தாக்கியுள்ளனார்.
மேலும் ஆத்திரம் அடங்காமல் நபீசின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் சயித் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி உள்ளனர். இதை பார்த்து சயீத்தின் 5 வயது மகள் அலறியுள்ளார்.
மேலும் தீயின் சீற்றம் தாங்க முடியாமல் சதீத் சாலைக்கு ஓடி வந்தார். பொதுமக்கள் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்ற முயல்வதற்குள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் சயித். தகவல் அறிந்து வந்த போலீசார் சயித் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கொலை, வரதரட்ணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் நபீஸ் குடும்பத்தார் அனைவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் ஒரு பெண் முத்தலாக் தொடர்பாக புகார் கூறியதை அலட்சியமாக எடுத்துக்கொண்ட காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகளின் பார்வை கண்டனம் தெரிவிக்கும் வகையில் திரும்பி உள்ளது.
இஸ்லாமிய பெண்களின் எதிர்காலம் கருதி முத்தலாக் தடுப்பு சட்டம் நிறைவேறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.