நீ எதுக்கு அங்க போறன்னு எனக்கு தெரியும்..! மனைவியை தனிமைக்கு அழைத்து கணவன் செய்த பகீர் சம்பவம்! தவிக்கும் 8 மாத குழந்தை!

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கணவன் இளம்பெண்ணின் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் மிகுந்த அதிர்வு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சரவணக்குமார் . இவருக்கும் ஜெயலட்சுமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. தம்பதினர் இருவரும் வேறு, வேறு பட்டாசு ஆலைகளில் கூலி தொழிலாளிகளாக பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், மாமியார் வீட்டின் அருகில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு கயல் என்ற 8 மாத பெண்குழந்தை உள்ளது. இதற்கிடையில், வேறு பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் மனைவி ஜெயலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு சரவணக்குமார் அவரை அடித்து உதைத்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பின்னர் மனைவியை தொழிற்சாலைக்கு வேலைக்கு போக வேண்டாம் என கூறி தகராறு செய்துள்ளார் சரவணக்குமார். இதையடுத்து ஜெயலட்சுமி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

பின்னர், வெள்ளிக்கிழமை மதியம் மனைவியை சமாதானம் பேசுவது போல மாமியார் வீட்டில் இருந்து தனது மனைவியை அழைத்து வந்த சரவணக்குமார் உடனே அவர் மீது ஆத்திரப்பட்டு அவரின் கழுத்து அறுத்து விட்டு தப்பி சென்றுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். 

இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜெயலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணையில் செங்கமலப்பட்டி கண்மாயில் பதுங்கி இருந்த கொலைகார சரவணக்குமாரை கைது செய்தனர்.