ஆபாச வீடியோ அனுப்பாதீங்க..! தொந்தரவு தாங்காமல் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

இந்திய நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் மலேசியாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் நகரில் பர்னாலா என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் மானு. இவரின் வயது 22. கடந்த ஒரு வருடமாகவே இவரை மிலன் சிங் குகி மற்றும் அமந்தீப் ஆகிய 2  இளைஞர்கள் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தனர். அவருடைய செல்போன் எண்ணுக்கு ஆபாச கருத்துக்களை அனுப்பியும், ஆபாச வீடியோக்களையும் அனுப்பி தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

இதனால் மானு மன உளைச்சலுக்கு ஆளானார். அவரின் வாழ்க்கையை சரி செய்வதற்காக பெற்றோர் அவரை மலேசியாவிற்கு அனுப்ப முடிவு செய்தனர். ஆனால் மலேசியா நாட்டிற்கு சென்ற பின்னரும், 2 பேரும் தொடர்ந்து அவரை கொடுமைப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு மீண்டும் ஆளானார். 16ஆம் தேதியன்று இருவரும் அவருக்கு வீடியோ கால் செய்துள்ளனர். அந்த அழைப்பில் பேசிய போது மானு "இருவரும் என்னை வாழ விடாமல் துன்புறுத்தி வருகிறீர்கள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று கூறிவிட்டு வீடியோ காலிலேயே தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலையின் ஸ்கிரீன்ஷாட்டை ஒரு இளைஞன் மலேசியா நாட்டில் உள்ள நிஷா என்ற பெண்ணுக்கு அனுப்பியுள்ளான். அதன் பேரிலேயே காவல்துறையினர் நிஷாவின் அறைக்கு சென்று அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்தனர்.

பெண் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து கொண்ட பெற்றோர் உடனடியாக இரண்டு இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த சம்பவமானது பஞ்சாப் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.