ஈரக்குழை வெளியே வரும் அளவிற்கு இருமல்..! ரத்த வாந்தி..! துடிதுடித்து உயிரிழந்த ஆனந்தி..! செங்கல்பட்டு பகீர்!

தொண்டை வலிக்காக ஆபரேஷன் செய்துகொண்ட அடுத்த 30 நிமிடங்களிலேயே 22 வயது இளம்பெண் ரத்த வாந்தி எடுத்தது செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செங்கல்பட்டு மாவட்டத்தில்  மறைமலைநகர் சாமியார் கேட் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 22 வயதான சங்கீதா என்ற மகளுள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே தொண்டையில் பெருத்த வலி இருந்துள்ளது.

தொடக்கத்தில் தாங்கி கொண்டிருந்த போதிலும், ஒரு கட்டத்தில் வலி அதிகரித்து விடவே தாம்பரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய தொண்டையில் புதிதாக சதை வளர்ந்திருப்பதாகவும், அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட வேண்டும் என்றும் கிருஷ்ணனிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

கிருஷ்ணன் ஒப்புக்கொண்ட பின்னர் மருத்துவர்கள் மார்ச் மாதம் 20-ஆம் தேதியன்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த அரை மணி நேரத்திலேயே சங்கீதா ரத்த வாந்தி எடுத்துள்ளார். மறுநாளே சுயநினைவையும் அவர் இழந்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு சிகிச்சை செய்ததில் ஏற்பட்ட கோளாறினால் இந்த துயரம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை சரி செய்து விடுவதாக மருத்துவர்கள் கிருஷ்ணனிடம் கூறியுள்ளனர்.

ஆனால் கிருஷ்ணன் இதுகுறித்து தாம்பரம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். பின்னர் நேற்று முன்தினம் திடீரென்று சங்கீதாவை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கிருஷ்ணனிடம் கூறியுள்ளனர். அங்கு சென்று பரிசோதனை மேற்கொண்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

தன் கண்முன்னே தன் மகள் உயிரிழந்ததை கண்டு கிருஷ்ணன் கதறி அழுத காட்சிகள் அருகிலிருந்தோரை கண்கலங்க வைத்தது. மீண்டும் தாம்பரம் காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகாரளித்தார். சங்கீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு சென்றிருப்பதால், முடிவுகள் வெளியான பிறகே வழக்கை தொடர இயலும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .