பெற்ற தாய் முன்னிலையில் மகளுடன் பாலியல் வல்லுறவு! இளைஞர்கள் 2 பேர் அரங்கேற்றிய கொடூரம்!

தாயின் கண் முன் 22 வயது இளம் பெண் இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள காக்ரோலி என்ற இடத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் அவரது தாயும் கடந்த ஞாயிற்றுக் கிழமை மருந்து வாங்குவதற்காக தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மருந்துக் கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தில்ஷாத் என்பவன் உள்ளிட்ட இருவர் திடீரென அவர்களை வழிமறித்து அந்த இளம் பெண்ணை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மகளைக் காப்பாற்ற தாயும் பின்னாலேயே ஓடினார். ஆனால் தாயை அடக்கிக் கட்டிப்போட்ட இருவரும் தாயின் கண் முன்னெயே மகளை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாககவும் பின்னர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பான பெண்ணின் தந்தையின் புகாரின் பேரில் தில்ஷாத்தை கைது செய்த போலீசார் தப்பியோடிய மற்றொருவனை தேடி வருகின்றனர்.