11 வயது சிறுமி உடலில் தெரிந்த மாற்றம்! பதறி அடித்து மருத்துவமனை சென்ற தாய்! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி! காரணம் 21 வயது சரவணன்!

ஒட்டன்சத்திரம் அருகே 11 வயது சிறுமியை கர்ப்பிணி ஆக்கிய 21 வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தட்டக்குழிக்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவருக்கு வயது 21. இந்த இளைஞன் புலிக்குத்துக்காடு என்ற பகுதியை சேர்ந்த 11வயது சிறுமியிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் சரவணகுமார் அந்த 11 வயது சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பம் ஆகியுள்ளார்.

தனது மகளின் உடலில் ஏற்படும் மாற்றத்தை அறிந்த அந்த சிறுமியின் தாய் அவரது மகளிடம் விசாரித்த போது தன்னுடன் நெருங்கிப் பழகி வந்த சரவண குமார் என்பவர் தன்னை பலாத்காரம் செய்ததை அவர் கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தாய் என்ன செய்வதென்று தெரியாமல் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை பலாத்காரம் செய்த சரவணக்குமார் என்பவரின் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.