13 நாட்கள் மாறி மாறி கற்பழித்த 5 பேர்! 21 வயது புது மணப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக திருமணமான பெண்ணை கடத்தி 13 நாட்கள் அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


21 வயது இளம் பெண்ணை கடந்த 6-ஆம் தேதி கடத்திச் சென்ற அவர்கள் சுமார் 2 வாரம் அடைத்து வைத்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பல்கர் மாவட்டத்தில் உள்ள நலசோப்பாரா நகரில் பிரகதி நகர் என்ற இடத்தில் அந்தப் பெண்ணின் வீடு உள்ளது. அங்கு வந்து தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு நபர் அந்தப் பெண்ணின் கணவனை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு தன்னுடன் வருமாறும் அழைத்தான். 

அந்த நபரை நம்பி, அவனுடன் மும்பையின் மலாட் பகுதிக்கு ஆட்டோவில் சென்ற போது தனக்கு நேரப் போகும் விபரீதம் அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கவில்லை. மலாடில் உள்ள ஒரு அறையில் அந்தப் பெண் முதலில் 8 நாட்களும் பின்னர் மிரா சாலையில் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தில் கடந்த 18-ஆம் தேதி வரையும் அந்தப் பெண் அடைத்து வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

அந்தப் பெண்ணை கடத்தி வந்த போலி போலீஸ்காரனும் மற்றொரு நபரும் அந்த இளம்பெண்ணை அந்த இடங்களில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததும் ஒரு பெண் உட்பட 3 பேர் அவர்களுக்கு உதவியாக இருந்ததும் தெரிய வந்தது. ஒரு வழியாக அவர்கள் அந்தப் பெண்ணை கடந்த 18-ஆம் தேதி விடுவித்து விட்டு தப்பி ஓடினர். 

இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி தனக்கு நேர்ந்தது குறித்து அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் பாலியல் பலாத்காரம், குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடி வருகின்றனர்.