இதயம், கிட்னி, நுரையீரல்..! போலீஸ்காரரின் உடல் உறுப்புகளை தனித்தனியாக அறுத்து சமைத்து சாப்பிட்ட தந்தை மகன்..!

காவல்துறை அதிகாரியை கொலை செய்து அவருடைய உடற்பாகங்களை தந்தை மற்றும் மகன் சமைத்து சாப்பிட்டு வந்த கோர சம்பவமானது உக்ரைன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் நாட்டில் மாக்சிம் என்ற 42 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு யாரோஸ்லாவ் என்ற 21 வயது மகன் உள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் முன்னாள் காவல்துறை அதிகாரியான பெட்ரோ என்பவருடன் மது அருந்தி கொண்டிருந்தனர்

நன்றாக பேசிக்கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் கெய்வின் படைகளுக்கும், மாஸ்கோ சார்பு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த வந்த மோதல்கள் குறித்து வாக்குவாதம் செய்து வந்துள்ளனர். அப்போது பெட்ரோ கூறிய சில செய்திகள் தந்தை மற்றும் மகனை ஆத்திரமடைய செய்தன.

உடனடியாக தனக்கு அருகே இருந்த கத்தியை எடுத்து யாரோஸ்லாவ் காவல்துறை அதிகாரியை குத்தி கொலை செய்துள்ளார். இதயம், உள்ளிட்ட பிற பாகங்களை தனித்தனியாக வெளியே எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி உடற்பாகங்களை சமைத்து ஒரு ஆதரவற்றவருக்கும் உணவாக கொடுத்துள்ளனர். பின்னர் அதையே தந்தை மற்றும் மகனும் சாப்பிட்டுள்ளனர். 

தலையில்லாத சடலத்தை எங்கோ வீசி சென்றுள்ளனர். காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, அந்த சடலமானது முன்னாள் காவல்துறை அதிகாரியான பெட்ரோ என்பவருடையது என்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் தந்தை மற்றும் மகன் தான் அதிகாரியை கொலை செய்துள்ளனர் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தனர். அந்நாட்டு நீதிமன்றம் தந்தை மற்றும் மகனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த சம்பவமானது உக்ரைன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.