விபத்தில் மரணம் அடைந்த இளைஞனுக்கு இறுதிச் சடங்கு இல்லை..! பெற்றோர் சொல்லும் கண் கலங்க வைக்கும் காரணம்.

வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறுப்புகள் 7 பேர் உடலில் இருப்பதால் பெற்றோர் இறுதி சடங்கு செய்ய மறுக்கும் சம்பவம் பரமக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட காந்தி நகர் எனும் இடத்தை சேர்ந்தவர் சரத்குமார். சரத்குமாரின் வயது 21. இவருடைய தந்தையின் பெயர் வெற்றிவேல். தாயாரின் பெயர் ராஜேஸ்வரி. சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த மாதம் 11-ஆம் தேதியன்று வேலை முடிந்த பின்னர் இரவு 8 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று துரதிர்ஷ்டவசமாக இவரது கட்டுப்பாட்டிலிருந்து இருசக்கர வாகனம் விலகியுள்ளது. தாறுமாறாக சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகியது.2 மணி நேரத்திற்கும் மேலாக அதே சாலையில் கேட்பாரற்ற நிலையில் சரத்குமார் உயிருக்கு போராடியுள்ளார். 

என்ன அவ்வழியே சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று அவருடைய உடலை ஏற்றி கொண்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவளுடைய சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த அடையாள அட்டை மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு ஏற்பட்டு 15-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

இரவு உறுப்புகள் நன்றாக செயல்பட்டு கொண்டிருந்ததால் சரத்குமாரின் பெற்றோர் அவற்றை மருத்துவமனைக்கு தானம் கொடுத்தனர். சரத்குமாரின் உடல் உறுப்புகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேர் உடல்களில் பொருத்தப்பட்டிருந்தது கூறப்படுகிறது.

ஏழு பேரின் ரூபத்தில் தங்கள் மகன் உயிரோடு இருப்பதால் இறுதி சடங்குகளை செய்ய சரத்குமாரின் பெற்றோர் மறுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சம்பவமானது பரமக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.