விநாயகருக்கு இலைகளால் அர்ச்சனை செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

இந்த விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரை 21 வகையான இலைகள் மற்றும் பூக்களை கொண்டு அர்ச்சிப்பது சிறந்த பலன்களை தரும் என நம்முடைய புராணங்கள் கூறுகின்றன.


21 வகையான இலைகளை இப்போது காண்போம் .

1 .கரிசலாங்கண்ணி இலை:  இல்லற வாழ்க்கைக்கு தேவையான பொருள் சேரும் .

2.அருகம்புல்:  அனைத்து சவுபாக்கியங்களும் கிட்டும் .

3.வில்வம் இலை:  விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. இலந்தை இலை:  கல்வியில் மேன்மையை அடையலாம்.

5. ஊமத்தை இலை:  பெருந்தன்மை குணம் பெருகும்.

6.வன்னி இலை:  பூலோக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் எல்லாவித நன்மைகள் கிடைக்கப் பெறும்.

7.நாயுருவி:  முகப் பொலிவும், அழகும் கூடும்.

8.கண்டங்கத்திரி:  வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.

9. அரளி இலை:  எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

10.அரச இலை:  உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

11.எருக்கம் இலை:  கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்

12. தேவதாரு இலை:  எதையும் தாங்கும் மனதைரியம் கிடைக்கும்.

13. மரிக்கொழுந்து இலை:  இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

14. விஷ்ணுகிராந்தி இலை:  நுண்ணிவு பெருகும்.

15.மாதுளை இலை:  பெரும் புகழ் கிடைக்கும்.

16.தவனம் இலை:  நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.

17.அரச இலை:  உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

18. ஜாதிமல்லி இலை:  சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.

19. தாழம் இலை:  செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.

20. அகத்தி இலை:  கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21.மருதம் இலை:  மகப்பேறு கிடைக்கும்