நிதி நெருக்கடி காரணமாக உலகின் மிகவும் பழமையான பிரிட்டன் பயண நிறுவனம் ஒன்று தற்போது மூடப்படும் நிலைக்கு வந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய டிராவல் கம்பெனி திவால்! ஒரே நாளில் தெருவுக்கு வந்த 21 ஆயிரம் ஊழியர்கள்!
பிரிட்டன் நாட்டின் மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற பயணி நிறுவனம் 1841 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் சுமார் 21,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு நிதி நெருக்கடி காரணமாக இந்த நிறுவனம் தற்போது மூடப்படும் நிலையை எட்டியுள்ளது.
தாமஸ் குக் நிறுவனத்தின் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தற்போது வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த நிறுவனம் திவாலான நிலையில் அவர்களை திரும்ப அழைத்து வர பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 16 நாடுகளில் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகிய பல்வேறு அமைப்புகள் இருந்து வருகிறது.
இந்நிறுவனத்தின் தற்போதைய கடன் சுமை சுமார் 15,000 கோடியாக அதிகரிக்க நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த கடனை அடைக்க பெரிய நிறுவனமான சீனாவின் fosun நிறுவனத்தை நாடியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனமானது சுமார் 8000 கோடி ரூபாய் நிதி அளிக்க ஒப்புக் கொண்டு அந்த நிதியை அளித்துள்ளது.
இதையடுத்து பாதியளவு கடன் சுமையைக் குறைத்துக் கொண்ட தாமஸ் குக் நிறுவனமானது தற்போது கடன் கொடுத்தவர்கள் மீதம் 1,700 கோடி வழங்க வேண்டும் என தெரிவிக்கவே என் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் ஃபேங்கவுசர் இந்த நிகழ்வுக்கு தனது வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இந்த நாள் தாமஸ் நிறுவனத்தின் மோசமான நாள் எனவும் பேசியுள்ளார்.
இதையடுத்து இந்த நிறுவனத்தை மூடுவதன் மூலம் சுமார் 21,000 பேர் வேலையை இழக்க நேரிடும் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளில் சென்றவர்களை திரும்ப அழைத்து வர பிரிட்டன் போக்குவரத்து துறை அமைச்சகமும் விமான போக்குவரத்து துறை ஆணையமும் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் முதல் வெளிநாடுகளில் இருக்கும் பிரிட்டன் குடிமக்களை தனது சொந்த நாட்டிற்கு அழைத்து வர பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.