சென்னையில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 20 லிட்டர் தண்ணீர் கேன் இலவசம் என அறிவித்த பிரியாணி கடை... வியாபரம் களைக்கியதுடன் மக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
பிரியாணி வாங்கினால் 20 லிட்டர் தண்ணீர் இலவசம்!களைகட்டும் தொப்பி வாப்பா கடை!
சென்னையில்ப் படித்துவிட்டு வேலை கிடைக்காத பட்டதாரிகள் சிலர் இணைந்து "தொப்பி வாப்பா பிரியாணி கடை" நடத்தி வருகின்றனர். வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் பகுதியில் இயங்கி வரும் இந்த கடைகளில் கடந்த சில நாட்களாக கூட்டம் களைக்கட்டியுள்ளது.
இந்த வருடம் , தமிழகம் எங்கும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடி வரும் நிலையில், மக்கள் தண்ணீர் வேண்டி ரோடுகளில் அல்லாடி வருகின்றனர். இந்த நிலையில், தொப்பி வாப்பா பிரியாணி அறிவித்த சலுகை தான் மக்களை.பிரியாணி கடை நோக்கி அலை மோத செய்துள்ளது.
இந்த பிரியாணி கடையில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் , கூடவே இலவசமாக 20 லிட்டர் தண்ணீர் கேன் கொடுத்து அசத்ததி வருகின்றனர். இதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து உள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.
இந்த கடையில் தண்ணீர் எப்போதும் விற்ப்பனைக்கு அல்ல என்று கேட்போரை ஆச்சரித்தில் ஆழ்த்தி வரும் நிர்வாகிகள் மேலும் இந்த சலுகை மூலம் மக்கள் மத்தியில் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.