உத்தரப் பிரதேசத்திலும் மோடி தான் கெத்து! வெளியானது கருத்துக்கணிப்பு!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த முறையை காட்டிலும் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்றாலும் மற்ற கட்சிகளை விட பாஜகவே அதிக இடங்களில் வெல்லும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.


இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலம் உத்திரப்பிரதேசம் தான். இந்த மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் பாஜக 73 இடங்களில் வென்றது. சமாஜ்வாடி கட்சிக்கு 5 எம்பிக்களும் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அங்கு ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் முக்கிய இரண்டு கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. ஏழு கட்ட தேர்தல் களம் முடிவாகி உள்ள நிலையில் தற்போது வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக விற்கு 58 இடங்கள் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கிடைத்துள்ளது. அதேசமயம் ரிபப்ளிக் தொலைக்காட்சி பாஜகவிற்கு உத்தரப்பிரதேசத்தில் 56 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. மற்ற முக்கிய ஊடகங்களும் கூட உத்தரபிரதேசத்தில் பாஜகவை அதிக இடங்களில் வெல்லும் என்று தெரிவித்து வருகிறது.

கடந்த முறையை காட்டிலும் குறைவான இடங்களில் பாஜக என்றாலும்கூட சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கூட்டணியை மீறி பாஜகவிற்கு 50 இடங்கள் கிடைப்பது என்பது உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய விஷயம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அந்த வகையில் உத்தரபிரதேசத்திலும் தேர்தல் முடிவுகள் மோடிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.