எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் தலைகுனிவை சந்திக்கும் என்கிற ரீதியில் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
எடப்பாடி - ஓபிஎஸ் தலைமையில் தலைகுனிகிறது அதிமுக! பரபர கருத்துக்கணிப்பு!

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினமே தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் எத்தனை மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை முன்னணி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
ஆங்கில தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை போலவே வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் அதிமுகவிற்கும் அதிகமாகவே உள்ளன. அதிகபட்சமாக அதிமுக கூட்டணி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் என்டிடிவி, இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்களும் தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணிக்கு 10 இடங்கள் கிடைப்பதே அரிது என்ற கவிதையில் கருத்து கணிப்புகளை வெளியிட்டு.
2011 தேர்தல் தொடங்கி கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்திலும் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்து தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடையும் பட்சத்தில் கட்சிக்கு தலைமை வைக்கும் இருவரால் ஏற்பட்ட தலைகுனிவு ஆகவே பார்க்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.