ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 20 ஆயிரம் பன்றிகள்..! அதிர வைக்கும் காரணம்!

பன்றி காய்ச்சல் பரவி வருவதால் பிலிப்பைன்ஸ் நாட்டில் 20,000 பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் வேகமாக பரவுவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவோ முயற்சித்தும் பிலிபைன்ஸ் நாட்டின் அரசாங்கத்தினால் இந்த நோய் பரவலை தடுக்க இயலவில்லை. வேறு வழியின்றி நோய் பரவுவதற்கான காரணமான பன்றிகளை கொல்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு கொடுத்து பிலிப்பைன்ஸ் நாட்டின் வேளாண்துறை அதிகாரி கூறுகையில், "முறையற்ற வகையில் பண்ணைகளில் பன்றிகள் பராமரிக்கப்பட்டு வருவதே இந்த நோய்க்கான முக்கிய காரணமாகும்" என்று கூறினார். இன்றுவரை பிலிப்பைன்ஸ் நாட்டில் மொத்தம் 20,000 பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 6000 பன்றிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தன. பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் 1:7:10 என்ற விதிமுறை கையாளப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பண்னைகளின் 1 கிலோமீட்டர் தூரம் வரையிலுள்ள அனைத்து பன்றிகளையும் கொன்று விடுவதும்,7 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள பன்றிகளின் இனப்பெருக்கத்தையும், விற்பனையையும் கட்டுப்படுத்துவதும், 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளில் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவமானது பிலிப்பைன்ஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.