ரவி சாஸ்திரி பதவியை குறி வைக்கும் 2000 பேர்! விண்ணப்பங்களை பார்த்து மிரண்டு போன பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சுமார் 2000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பிசிசிஐக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டாம் மூடி இந்தப் பதவிக்காக தன்னுடைய விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளார் . இவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள்  ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது .

இதேபோல் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்  மற்றும் தற்போதைய  கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன மைக் எஸ்சன் இந்தப் பதவிக்காக விண்ணப்பித்துள்ளார்.

மேலும் இந்தியாவை சேர்ந்த ராபின் சிங் மற்றும் லால்சந்த் ஆகியோரும் விண்ணப்பித்துள்ளனர் .இப்படியாக பல்வேறு நாடுகளிலிருந்து பல விண்ணப்பங்கள் பிசிசிஐ நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

இப்படியாக சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வந்துள்ளன. இதிலிருந்து சிறப்பான  பயிற்சியாளரை இந்த நிர்வாக அதிகாரிகள் தேர்வு செய்ய உள்ளனர்.

இது மிகவும் சவால் நிறைந்த பணியாக பிசிசிஐக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பில்டிங் கோச் பதவிக்காக சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். 

தற்போதைய  இந்திய கிரிக்கெட் அட்வைசரி கமிட்டியின் தலைவரானார் கபில்தேவ் தலைமையிலான குழு  , இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளரை நியமனம் செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ளது .