22 வயது கணவன் கோர மரணம்..! 20 வயது மனைவி எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் குடும்பத்தினர்! படப்பை பரபரப்பு!

காதல் கணவர் விபத்தில் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் வசித்து வந்த பாலாஜி என்பவர் ரசிதா என்பவரை காதலித்து இருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருமே சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். 

இந்நிலையில் செரப்பணஞ்சேரியில் இருந்து படப்பை நோக்கி சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் பாலாஜி. அப்போது வெள்ளேரிதாங்கல் என்ற சந்திப்பில் பின்னால் வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாலாஜியின் தலை மீது லாரியின் சக்கரம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் பாலாஜி.

தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் பாலாஜியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து எதனால் விபத்து நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே திருமணம் ஆன சிறிது காலத்திலேயே கணவர் பாலாஜி அகால மரணம் அடைந்துவிட்டாரே என விரக்தியில் இருந்துள்ளார் ரசிதா. நேற்று இரவு அழுதவாறு துக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவித்தார் ரசிதா. மறுநாள் காலை விபரீத முடிவு எடுத்த ரசிதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.