செல்போனால் விபரீதம்! அழுது கொண்டே இரவு படுக்கை அறைக்கு சென்ற இளம் பெண்! அதிகாலையில் அவர் தாய் கண்ட காட்சி!

திருவள்ளூர் அருகே இளம்பெண் ஒருவர் செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவரது தாய் கண்டித்ததையடுத்து அவமானம் தாங்காமல் அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளுரை அடுத்து கடம்பத்தூர் ஒன்றியத்தில் சத்தரை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவருக்கு திருமணமாகி இருபது வயதில் ரோகிதா என்ற மகள் உள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் ரோகிதா வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். 

வீட்டிலேயே இருந்து வந்தார் ரோகிதா நேற்று முன்தினம் யாரிடமோ செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார். தன் மகள் நீண்ட நேரமாக யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்த அவரது தாயார் தன் மகளிடம் விசாரனை செய்து இருக்கிறார். இதனையடுத்து அவர் ரோகிதாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரோகிதா விபரீதமான முடிவுக்கு வந்துள்ளார்.

தன்னுடைய அறைக்குள் நுழைந்த ரோகிதா, அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்ற மகள் தூக்கில் தொங்குவதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து கடம்பத்தூர் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.