20 வயதில் கர்ப்பம்! ஆற்றில் குதித்த பிரியங்கா..! காதல் கலப்புத் திருமணம் செய்தவருக்கு ஏற்பட்ட விபரீதம்! அதிர்ச்சி சம்பவம்!

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் திடீரென காணாமல் போய்விட்டதால் கர்ப்பிணி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நீலகிரிஉ மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த பிரியங்கா என்பவர் 7 மாதங்களுக்கு முன்னர் மாற்று சமுதாயத்தை சேர்ந்த பூவரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் திடீரென கணவர் காணாமல் போனதாக தெரிகிறது. பல இடங்களிலும் தேடியும் கணவர் கிடைக்காததால் ஒருவேளை தன்னை கைவிட்டுவிட்டாரோ என்ற அச்சம் பிரியங்காவிற்கு வந்துவிட்டது.  

இதனால் மனமுடைந்த பிரியங்கா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு வீட்டை விட்டு வெளியேறினார். நேராக கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்தில் நின்று சிறிது நேரம் அழுதுள்ளார். அதன் பின்னர், முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் பிரியங்கா. அவர் குதிக்க முயற்சி செய்வதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து பிடித்தனர்.

பின்னர் அவரை லோயர் கேம்ப் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் காதலித்து திருமணம் செய்தவர் தன்னை விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும், தற்போது உறவினர் வீட்டிற்கும் செல்லமுடியாமல் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் பிரியங்கா போலீசில் தெரிவித்தார். பிரியங்கா தந்த தகவலில் போலீசார் அவரது கணவர் பூவரசன் இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்.