20 வயது மகளின் சடலத்தை சாலையில் வைத்து பெற்றோர் செய்த செயல்! அதிர வைக்கும் காரணம்!

திருமணமானவர் என தெரியாமலேயே இரண்டு ஆண்டுகளாக காதலித்த ஒரு இளைஞரை காதலித்து வந்த கல்லூரி மாணவி. திருமணமானவர் என தெரிய வந்த நிலையில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவில் உள்ள சித்தூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா. இவர் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அனைவரும் இளம்பருவத்தில் மலரும் காதல், இவருக்கும் மலர்ந்துள்ளது. பாத்திமா வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த இப்ராஹீம் என்ற இளைஞர் உடன் காதல் வசப்பட்டு இருந்தார். ஆனால் அந்த இளைஞர்க்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்துள்ளது.  

இதற்கிடையில், அந்த இளைஞ்ர் பாத்திமாவிடம் தான் திருமணமானவன் என்ற உண்மையை மறைத்து, அவரிடம் பழகி 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

இதையடுத்து, பாத்திமாவிற்கு இப்ராஹீமிடம் திருமணமானவர் என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதனிடையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. திருமணமானதை மறைத்து தன்னை காதலித்து ஏமாற்றத்தை தாங்க முடியாமல், பாத்திமா மனமுடைந்து கடந்த 13ம் திகதி இரவு வீட்டின் ஒரு அறையில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பாத்திமா சடலத்துடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர், தற்பொலை குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், காவல் துறையின் விசாரணையில் இந்த உண்மை எல்லாம் தெரிய வந்த நிலையில், இப்ராஹீம் பிடிக்க சென்ற காவல்துறையினரை கண்டு அந்த இளைஞ்ர் தலைமறைவானார்.

இப்ராஹீம் தலைமறைவை அடுத்து அவரை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் படுத்தியுள்ளது.