கல்யாணமாகி ஏழே மாதம்..! கர்ப்பம் தரிக்கவில்லை என்று விஷம் குடித்த ஓவியா...

திருமணமாகி 7 மாதங்கள் ஆகிய போதும் குழந்தை பிறக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் டவுன் சங்கம் நகர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள உள்ள திரு.வி‌.க நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இவருக்கு சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் ஓவியா என்ற 20 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 7 மாதங்களாகியும் ஓவியா கர்ப்பம் அடையவில்லை. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். விக்னேஷ் அவரை சமாதானப்படுத்தினாலும் அவரால் மன அழுத்தத்தில் இருந்து மீள இயலவில்லை. 

தனக்கு குழந்தை பிறக்காது என்ற தவறான எண்ண ஓட்டம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. குழந்தையை பற்றியே எப்பொழுதும் யோசித்து கொண்டிருந்தால் கடுமையான மன அழுத்தத்தால் அவதிப்பட்டார். நேற்று மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில், குழந்தை பிறக்காததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக ஓவியா கடிதம் எழுதியுள்ளார். 

அதன் பின்னர், விஷம் குடித்து ஓவியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு திரும்பி வந்த உறவினர்கள் ஓவியா மயங்கி கிடப்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ஓவியாவை தூக்கி சென்றனர். 

ஆனால் ஓவியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ‌ உடனடியாக ஓவியாவின் குடும்பத்தினர் குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஓவியா தன் வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். திருமணமான 7 மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கை உதவி கலெக்டர் விசாரித்து வருகிறார். 

இந்த சம்பவமானது குடியாத்தத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.